தமிழகத்தில் 24 நேரமும் சாராயம், கஞ்சா கிடைக்கும், ஆனால் திமுக ஆட்சியில் சமூக நீதி மட்டும் கிடைக்காது என்று பாமக தலைவர் அன்புமணி விமர்சித்துள்ளார்.
செங்கல்பட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அமைச்சர்கள் அனைவரும் வியாபாரிகள், வியாபாரம்தான் செய்து வருகிறார்கள் என்றார்.
சமூகநீதிக்கும் முதல்வருக்கு என்ன சம்மந்தம், சமூகநீதிக்கு துரோகம் செய்கிறார் முதல்வர் என்றும் அவர் கூறினார். தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுக்க தங்களுக்கு அதிகாரம் இல்லை என முதல்வர் பொய் கூறி வருகிறார் என்றும், வருங்காலங்களில் தமிழ்நாடு திமுக கையில் இருந்தால் கஞ்சா நாடு என்ற பெயர் மாற்றப்படும் என்றும் அன்புமணி சாடினார்.