அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய மகளிர் ஆணையத் தலைவர் விஜயா ரஹத்கர் தெரிவித்துள்ளார்.
சென்னை ஐஐடி வளாகத்தில் மாணவி ஒருவரை மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்த நிலையில், தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் விஜயா ரஹத்கர், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கல்லூரி வளாகத்திற்குள் உள்ள சிசிடிவி கேமராக்களின் செயல்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்ததாக கூறினார்.
ஞானசேகரன் வழக்கில், மாணவிக்கு என்ன நடந்தது என்பது கல்லூரி முதல்வர் மற்றும் பேராசிரியர்களிடம் கேட்டதாக தெரிவித்தார். இது முதல்கட்ட ஆய்வு என்றும், மீண்டும் பல்கலைக்கழகத்தில் ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக விஜயா ரஹத்கர் கூறினார்.