பிரதமர் மோடியிடம் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை முதலமைச்சர் ஸ்டாலின் சார்பில், அமைச்சர் தங்கம் தென்னரசு வழங்கினார்.
அதில், சமக்ர சிக்ஷா திட்டத்தில் தமிழகத்திற்கான 2 ஆயிரத்து 151 கோடி ரூபாய் நிலுவை தொகையை, நிபந்தனைகள் இன்றி விடுவிக்க வேண்டும் என்றும், தமிழகத்தில் கிடப்பில் உள்ள பல்வேறு ரயில்வே திட்டங்களுக்கான ஒப்புதல், நிதி ஒதுக்கீடு பணிகளை விரைவுபடுத்த வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
கோவை, மதுரை நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு ஒப்புதல், நிதியுதவியை விரைந்து வழங்கிட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ள முதலமைச்சர், இலங்கை கடற்படை கைது செய்துள்ள மீனவர்கள், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை விடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமரிடம் கோரிக்கை வைத்தார்.