திருச்சி விமான நிலையத்தில் பிரதமர் மோடியை வரவேற்று, 3 முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
அதில், விவசாய கடன் வழங்குவதற்கு சிபில் ஸ்கோர் கேட்பதில் இருந்து வங்கிகள் விவசாயிகளுக்கு விதிவிலக்கு வழங்க வேண்டும் என்று கேட்டு கொண்டார்.
மேலும், கோதாவரி – காவிரி இணைப்பு திட்டத்துக்கு நிதி ஒதுக்கி திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்த எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் ராணுவ தளவாட உற்பத்திக்கு வழிவகுக்கும் பிரத்யேக ராணுவ வழித்தடம் ஒன்றை சென்னை, கோவை, ஓசூர், சேலம், திருச்சியை இணைத்து செயல்படுத்துமாறு வேண்டுகோள் விடுத்தார்.
மனுவை பெற்றுக் கொண்ட பிரதமர் மோடி கோரிக்கை மனுவை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக எடப்பாடி பழனிசாமியிடம் உறுதியளித்தார்.