எளிமையின் எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் அப்துல் கலாம் என இஸ்ரோ தலைவர் நாராயணன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் 10ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி ராமேஸ்வரத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் இஸ்ரோ தலைவர் நாராயணன், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரோ தலைவர் நாராயணன், மறைந்த அப்துல் கலாம் இந்தியாவிற்கானவர் என தெரிவித்தார். எளிமையின் எடுத்துக்காட்டாக வாழ்ந்த மாமனிதருடன் பணியாற்றியது தனது வாழ்நாளில் மறக்க முடியாத நிகழ்வாக உள்ளது என கூறினார்.
சந்திரயான் று செயற்கைக்கோள் விண்ணில் ஏவுவதற்காக தயார் செய்தபோது அப்துல் கலாம் பல்வேறு முக்கிய யோசனைகளை வழங்கினார் என இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்தார்.