கங்கை நீரைக் கொண்டு வந்தது மூலம் பிரதமர் மோடி வரலாற்றில் இடம் பிடித்ததாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கங்கை நதியின் புனித நீரை, கங்கை கொண்ட சோழபுரத்தில் எழுந்தருளியிருக்கும் பிரகதீஸ்வரருக்குக் கொண்டு வந்ததன் மூலம், மாமன்னர் ராஜேந்திர சோழனின் போற்றுதலுக்குரிய மரபை, நமது பாரதப் பிரதமர் மீட்டுருவாக்கம் செய்திருக்கிறார்.
வாரணாசியிலிருந்து கங்கை நீரைக் கொண்டு வந்து, கங்கைகொண்ட சோழபுரம் கோயிலைக் கட்டிய மாமன்னர் ராஜேந்திர சோழனின் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வினை நினைவுபடுத்தியது மூலம், நமது பாரதப் பிரதமர் மோடி
வரலாற்றில் இடம்பிடித்திருக்கிறார்.
தமிழகத்தின் மகத்தான கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் சிறப்பினைப் போற்றும், மற்றுமொரு உன்னதமான தருணம் இது என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.