திரிபுராவில் பிரதமர் மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சியில் நடைபெற்ற தாக்குதலில் பாஜக தொண்டர்கள் காயமடைந்தனர்.
கோவாய் மாவட்டத்தில் உள்ள ஆஷாரம்பரி பகுதியில் பிரதமர் மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சி ஒலிபரப்பப்பட்டது. அப்போது திப்ரா மோத்தா கட்சியினர் அங்கு புகுந்து பாஜக தொண்டர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதில் 9 பேர் காயமடைந்த நிலையில் அவர்களின் வாகனங்களும் அடித்து நொறுக்கப்பட்டன.
இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாஜக தொண்டர்களை முதலமைச்சர் மாணிக் சாஹா நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். தாக்குதல் குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், திப்ரா மோத்தா கட்சியினர் நடத்திய வன்முறை மற்றும் ஜனநாயக விரோத தாக்குதலை கண்டிப்பதாக கூறியுள்ளார்…