தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உணவு பார்சலுக்கு பணம் கேட்ட ஊழியரை மிரட்டித் தாக்குதலில் ஈடுபடும் நபரின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
கோவில்பட்டி ரயில்வே சாலையில் செயல்பட்டுவரும் உணவகத்திற்கு வந்த 2 பேர், உணவு பார்சல் வாங்கியுள்ளனர்.
அப்போது வாங்கிய பார்சலுக்கு பணம் கேட்ட உணவக ஊழியரைக் கத்தியைக் காட்டி மிரட்டிய நபர்கள், உணவு வாங்க வந்த கணேஷ் பாண்டி என்பவர் மீது சரமாரி தாக்குதல் நடத்தினர்.
இதையடுத்து காயமடைந்த கணேஷ் பாண்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், தகராறில் ஈடுபட்ட இருவரை போலீசர் தேடி வருகின்றனர்.