பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த ப.சிதம்பரத்திற்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.
தனியார் பத்திரிகைக்குப் பேட்டியளித்த ப.சிதம்பரம், பஹல்காமில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் எங்கே? அவர்களை அடையாளம் காணவோ, கைது செய்யாமல் இருப்பது ஏன்?குறிப்பிட்டிருந்தார்
ப.சிதம்பரத்தின் பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்துள்ள பாஜக ஐடி பிரிவு தலைவர் அமித் மால்வியா, மீண்டும் ஒருமுறை, காங்கிரஸ் பாகிஸ்தானுக்கு நற்சான்று வழங்கப் பார்க்கிறது என்று தெரிவித்துள்ளார்.
தாக்குதலில் ஈடுபட்டவர்கள் லக்சர் இ தொய்பாவுடன் தொடர்புடைய பாகிஸ்தானியர்கள் என்று NIA தெரிவித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள மால்வியா,
பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதத்தை எதிர்கொள்ளும் போது, காங்கிரஸ் தலைவர்கள் எதிர்க்கட்சியாக இல்லாமல், இஸ்லாமாபாத்தின் பாதுகாப்பு வழக்கறிஞர்களாக ஒலிப்பதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.