துருக்கியில் கட்டுக்கடங்காமல் பரவி வரும் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த முடியாமல் அந்நாட்டு அரசு திணறி வருகிறது.
துருக்கியில் கடந்த சில வாரங்களாகக் காட்டுத்தீ பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், அந்நாட்டின் வடமேற்கே அமைந்த 4-வது மிக பெரிய நகரான புர்சா நகரில் காட்டுத்தீ பரவி வருகிறது.
இதனால், லட்சக்கணக்கான மரங்கள் மட்டுமின்றி, அரிய வகை உயிரினங்களும் தீயில் கருகின. அப்பகுதியில் உள்ள மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
கட்டுக்கடங்காமல் பரவி வரும் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்களும், தன்னார்வலர்களும் ஈடுபட்டுள்ளனர்.