ஆப்ரேஷன் சிந்தூர், ஆப்ரேஷன் மகாதேவ் ஆகிய இரு நடவடிக்கைகளும் முழு வெற்றியை பெற்றுள்ளதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா பெருமிதம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மக்களவையில் உரையாற்றிய அவர், ஆப்ரேஷன் மஹாதேவ் நடவடிக்கையின் போது கொல்லப்பட்ட 3 தீவிரவாதிகள் தான் பஹல்காமில் கொடூரத் தாக்குதலை நடத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
பஹல்காம் தாக்குதலை நடத்திய 3 தீவிரவாதிகளைச் சுட்டுக்கொன்று நமது ராணுவம் பழி தீர்த்துள்ளதாகக் கூறியுள்ள உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஆப்ரேஷன் சிந்தூர், ஆப்ரேஷன் மகாதேவ் ஆகிய இரு நடவடிக்கைகளும் முழு வெற்றியைப் பெற்றுள்ளதாகப் பெருமிதம் தெரிவித்தார்.
தொடர்ந்து, ஆப்ரேஷன் மஹாதேவ் மூலம் கொல்லப்பட்ட மூவரில் இருவருக்கு, பாகிஸ்தான் வாக்காளர் அடையாள அட்டை இருந்ததென விளக்கம் அளித்த அமித் ஷா, தீவிரவாதிகள் மீன்பிடித்துக் சேர்ந்தவர்கள் என்பதற்கு வேறு என்ன ஆதாரம் வேண்டும் என ப.பிடித்ததாகக் கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய அவர், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இன்றும் இருப்பதற்கு முன்னாள் பிரதமர் நேருவின் தவறான கொள்கைகளே காரணம் எனவும் விமர்சித்தார்.