நாசாவுடன் இணைந்து இஸ்ரோ உருவாக்கிய நிசார் செயற்கைக்கோள் இன்று மாலை விண்ணில் செலுத்தப்படவுள்ளது.
பூமியின் மேற்பரப்பை கண்காணிக்க இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமும், அமெரிக்க விண்வெளி ஆய்வு மையம் இணைந்து நிசார் என்ற செயற்கைக்கோளை உருவாக்கியுள்ளன.
12 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த செயற்கைக்கோள், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து GSLV – F16 ராக்கெட் மூலமாக இன்று மாலை 5.40 மணிக்கு விண்ணில் பாயவுள்ளது.
இந்த செயற்கைக்கோள் புவியில் இருந்து 743 கிலோமீட்டர் தொலைவில் நிலைநிறுத்தப்படும் எனவும், இது புவியை கண்காணிக்கும் வகையில் அதிநவீன ரேடார் செயற்கைக்கோளாக நிசார் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம், புவியின் சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றம், பேரிடர் மேலாண்மை உள்ளிட்ட தகவல்களை பெற முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
2 ஆயிரத்து 392 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைக்கோள் 5 ஆண்டுகள் செயல்படும் எனவும், இது 12 நாட்களுக்கு ஒருமுறை பூமியை சுற்றிவந்து துல்லியமான தகவல்களை வழங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.