இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு 20 முதல் 25 சதவீதம் வரை வரி விதிக்கப்படலாம் என, அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அவரிடம் பேட்டியெடுத்த செய்தியாளர் ஒருவர், இந்தியாவுக்கு அதிக வரி விதிக்கப்பட உள்ளதா என கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த ட்ரம்ப், தான் அவ்வாறு நினைப்பதாக தெரிவித்தார்.
மேலும், இந்தியா சிறந்த நட்பு நாடு எனவும், தனது வேண்டுகோளின் பேரில்தான் அவர்கள் பாகிஸ்தானுடனான போரை முடிவுக்குக் கொண்டுவந்தார்கள் எனவும் தெரிவித்தார்.
இந்தியாவுடனான ஒப்பந்தம் இறுதி செய்யப்படவில்லை எனவும் டிரம்ப் குறிப்பிட்டார்.