ஹாங்காங்கில் அதேகனமழை காரணமாகக் கருப்பு மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஹாங்காங்கின் பல்வேறு பகுதிகளில் பெய்துவரும் கனமழை காரணமாக ஆங்காங்கே நிலச்சரிவும், வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக லாம்மா தீவில் மணிக்கு 100 மில்லி மீட்டருக்கும் அதிகமான மழை பதிவாகியுள்ளது. இதனால் நடப்பாண்டில் முதல்முறையாக ஹாங்காங்கில் கருப்பு மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மழைப்பொழிவு குறையும்வரை பயணங்களைத் தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.