தீவிரவாதிகள் கைகளில் M4 carbine rifle கிடைத்தது எப்படி?
Sep 16, 2025, 07:42 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

தீவிரவாதிகள் கைகளில் M4 carbine rifle கிடைத்தது எப்படி?

Web Desk by Web Desk
Jul 30, 2025, 08:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்திய ராணுவம் நடத்திய ஆப்ரேஷன் மகாதேவ் நடவடிக்கை பஹல்காம் தாக்குதலை அரங்கேற்றிய 3 தீவிரவாதிகளின் உயிரைக் குடித்துள்ளது. பாகிஸ்தான் தீவிரவாதிகள்  அமெரிக்காவின் M4 carbine rifle போன்ற பயங்கர ஆயுதங்களைப் பயன்படுத்தியபோதும், தீவிரவாதிகளுக்கு முடிவு கட்டியுள்ளது இந்திய ராணுவம்.

பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து ஜம்மு-காஷ்மீர் மற்றும் ஸ்ரீநகரில் “ஆப்ரேஷன் மகாதேவ்” பெயரில் தேடுதல் வேட்டையை முடுக்கிவிட்டது ராணுவம்.

லஷ்கா்-ஏ-தொய்பா தீவிரவாதிகள் ரகசிய செய்திகளை அனுப்பப் பயன்படுத்தும் தகவல்தொடர்பு சாதனத்தின் தொழில்நுட்ப சமிக்ஞை, ஹாா்வான் வனப்பகுதியிலிருந்து கிடைக்க, புலி போன்று பதுங்கி பாய்ந்தது ராணுவம்….  24 ராஷ்ட்ரிய ரைபிள்ஸ் மற்றும் 4 பாரா படையினரைக் கொண்ட குழு பயங்கரவாதிகளை வேட்டையாடியது.

ராணுவத்தினால் சுட்டுக்கொல்லப்பட்ட 3 தீவிரவாதிகளும் பஹல்காம்  தாக்குதலை அரங்கேற்றியவர்கள் என்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக பஹல்காம் தாக்குதலில் மூளையாகச் செயல்பட்ட சுலைமான அலியாஸ் ஃபைசல் லஷ்கர் – இ-தொய்பா தீவிரவாத அமைப்பில் A-Category கமாண்டராக செயல்பட்டார் என்பதும், பாகிஸ்தான் ராணுவத்தில் சிறப்புப் பயிற்சி பெற்ற SSG படைப்பிரிவில் கமாண்டாவோ பணியாற்றினார் என்பதும் தெரியவந்துள்ளது.

இதேபோன்று லஷ்கர்-இ-தொய்பாவின் A-Category தீவிரவாதி ஆஃப்கன், A-grade தீவிரவாதி ஜிப்ரான்  ஆகியோரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுட்டுக்கொல்லப்பட்ட  தீவிரவாதிகளிடம் இருந்து அதிநவீன அமெரிக்காவின் M4 கார்பைன் ரைபிள், இரண்டு ஏகே.47 துப்பாக்கிகள், 17 கையேறி குண்டுகள் போன்ற பயங்கர ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.  ஜம்மு காஷ்மீரில் அத்துமீறும் தீவிரவாதிகள் வேட்டையாடப்பட்டு வரும் நிலையில், அண்மைக்காலமாக அவர்களிடம் மேற்கத்திய ஆயுதங்கள் கிடைத்து வருவது கவலையை ஏற்படுத்தியிருக்கிறது.

கடந்த 2021ம்  ஆண்டு ஆப்கானிஸ்தான் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறியபோது, அமெரிக்க ராணுவத் தளவாடங்கள் தாலிபான்களின் கைகளில் சிக்கின. அந்த ஆயுதங்கள் சட்டவிரோத சந்தைகள் மூலம் பாகிஸ்தானுக்குள் நுழைந்ததும், பின்னர் அவை இந்திய எல்லையில் தீவிரவாதிகளுக்குக் கைமாறியதும் தெரியவந்துள்ளது.

அமெரிக்காவின் M4 Carbine ரைபிள்கள் இலகுவானது என்பதால், காஷ்மீர் போன்ற செங்குத்தான மலைப்பகுதிகள், கரடுமுரடான காட்டுப்பாதைகளில் எடுத்துச் செல்வது எளிதானது, எடைகுறைவானது. இதன் மூலம்  கூடுதல் ஆயுதங்களையும் கொண்டுசெல்ல முடியும் என்பதால் தீவிரவாதிகள் இவ்வகை ரைபிள்களுக்கு முக்கியத்துவம் அளித்து வருவது தெரியவந்துள்ளது. மேலும் M4 Carbine-னில் பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளதால்,  எந்த சூழ்நிலையிலும் எதிரிகளைத் துல்லியமாகத் தாக்கலாம்.

தீவிரவாதிகளிடம் கைப்பற்றப்பட்ட நவீன ஆயுதங்கள், இந்தியாவின் போர் உத்தியை மறுசீரமைப்பதற்கான சமிக்ஞையாகப் பார்க்கப்படுகிறது. மேலும் எல்லைகளில் வேலி அமைத்தல், பயங்கரவாதத்திற்கு நிதி மற்றும் ஆயுதக்கடத்தலுக்கு எதிரான உலகளாவிய ஒத்துழைப்பு போன்றவற்றையும் வலியுறுத்துகிறது.

Tags: How did the terrorists get the M4 carbine rifle?M4 carbine rifleindia vs pakistanஇந்திய ராணுவம்தீவிரவாதிகள்ஆப்ரேஷன் மகாதேவ்
ShareTweetSendShare
Previous Post

முதலமைச்சருடன் சந்திப்பு எதிரொலி? : விஜயை கடுமையாக சீமான் விமர்சிக்கும் பின்னணி!

Next Post

ரஷ்யாவில் பயங்கர நிலநடுக்கம் – மிரட்டிய சுனாமி – மிரட்சியில் மக்கள்!

Related News

பிசிசிஐ ஸ்பான்சரான அப்போலோ டயர்ஸ் நிறுவனம்!

அசாமில் சட்டவிரோதமாக சொத்து சேர்த்ததாக இளம் பெண் அதிகாரி கைது!

மலேசியா : கனமழை, நிலச்சரிவால் 11 பேர் பலி!

140 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவின் மிக்சிக்கன் ஏரியில் மூழ்கிய சரக்கு கப்பல் கண்டுபிடிப்பு!

ஊழியரை நாய் என்று திட்டிய பாவத்திற்காக 90 கோடி ரூபாய் இழப்பீடு – ஜப்பான் நிறுவனம்!

பாலாறு மாசு – சுற்றுச்சூழல் மதிப்பீட்டு குழு அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவு

Load More

அண்மைச் செய்திகள்

திராவிட மாடல் கும்பல் அரியணையில் தொடரவே தகுதியற்றது – நயினார் நாகேந்திரன்

செங்கல்பட்டு அருகே பாமக பிரமுகர் அடித்துக் கொலை!

சீன மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் – 2வது சுற்றுக்கு பி.வி.சிந்து தகுதி!

தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

4 நாட்களில் ரூ.91.45 கோடியை வசூலித்த மிராய் படம்!

அம்பத்தூர் அருகே கஞ்சா போதையில் இளைஞர்கள் வெறிச்செயல் – போலீஸ் வலைவீச்சு!

சூர்யா 46 படத்தின் ஓடிடி உரிமையை வாங்கிய நெட்பிளிக்ஸ்!

சிவகங்கை மாவட்டம் சிப்காட் பகுதியில் மருத்துவக்கழிவு ஆலை திறக்க மக்கள் எதிர்ப்பு!

கள்ளக்குறிச்சி : சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட தனிப்பிரிவு தலைமைக் காவலர் கைது!

சென்னை : கனமழை காரணமாக வேரோடு சாய்ந்த மரங்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies