ரஷ்யாவில் பயங்கர நிலநடுக்கம் - மிரட்டிய சுனாமி - மிரட்சியில் மக்கள்!
Sep 27, 2026, 11:30 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

ரஷ்யாவில் பயங்கர நிலநடுக்கம் – மிரட்டிய சுனாமி – மிரட்சியில் மக்கள்!

Murugesan M by Murugesan M
Jul 30, 2025, 08:45 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ரஷ்யாவின் கிழக்குப்பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம், பொதுமக்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. சுனாமியின் தாக்கம் காரணமாக ஜப்பான் மற்றும் பசிபிக் கடலை ஒட்டிய நாடுகளில்  கரையோர பகுதி மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

குலுங்கிய கட்டடங்கள்… சரிந்து விழுந்த பொருட்கள்….  உறைந்து போன மக்கள் என ரஷ்யாவை உலுக்கியெடுத்துள்ளது சக்தி வாய்ந்த  நிலநடுக்கம்.

ரஷ்யாவின் கிழக்குப் பகுதியான கம்சட்கா தீபகற்பத்தில் இந்திய நேரப்படி அதிகாலை 5.30 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்  ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 8.8 ஆக பதிவான பூகம்பத்தால் கட்டடங்கள்  திடீரென குலுங்க, அதிர்ச்சியில் உறைந்த பொதுமக்கள், வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர். சில கட்டடங்கள் இடிந்து விழுந்தது மக்களிடையே பீதியை ஏற்படுத்தியது.

ஒரு பக்கம் நிலநடுக்கம் என்றால்,  பூகம்பத்தின் தாக்கத்தால்,  4 மீட்டர் உயரத்திற்கு எழுந்த சுனாமி பேரலைகள் கடலோர பகுதிகளை சீற்றத்துடன் விழுங்கியது.  உயிரைக் காப்பாற்றிக் கொள்ளப் பொதுமக்கள் வீட்டின் மாடிகளில் தஞ்சமடைந்தனர். நிலநடுக்கத்தால் கிண்டர் கார்டன் ஒன்று உருக்குலைந்த நிலையில், அங்கிருந்த குழந்தைகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

சுனாமி பேரலையின் தாக்கத்தால், ரஷ்யாவின் ஆன்டிஃபெரோவ் தீவுப்பகுதிகளில் ஏராளமான கடற்சிங்கங்கள் கரைகளை நோக்கி இழுத்து வரப்பட்டன. நிலநடுக்கத்தின் வீரியத்தால் எழுந்த சுனாமி பேரலை, ரஷ்யாவைத் தொடர்ந்து ஜப்பானின் ஹோக்கெய்டோ நகரில் 8 இடங்களைத் தாக்கியது.  மீண்டும் சுனாமி அலைகள் தாக்க வாய்ப்புள்ளதாகக் கருதப்படும் நிலையில், ஜப்பானில் 20 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.

அமெரிக்கா, சீனா, பிலிப்பைன்ஸ், சிலி  உள்ளிட்ட பசிபிக் பெருங்கடலை ஒட்டிய 40  நாடுகளுக்குச் சுனாமி எச்சரிக்கை. விடுக்கப்பட்டது. மக்கள் உயரமான பகுதிக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டு சைரன் ஒலிக்கப்பட்டது.

ஜூலை மாதத்தின் தொடக்கத்தில் ரஷ்யாவின் கம்சட்கா பகுதியில் 7.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், தற்போது மீண்டும் ஒரு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. கடந்த 1952-ம் ஆண்டு இதேபகுதியில் ரிக்டர் 9 ஆகப் பதிவான நிலநடுக்கத்தால், அமெரிக்காவின் ஹவாய் பகுதியில் 9.1 மீட்டர் அளவுக்குச் சுனாமி பேரலைகள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

Tags: earthquakes in RussiaTerrible earthquake in Russia - people in fear of a threatened tsunamiமிரட்டிய சுனாமிரஷ்யாவில் பயங்கர நிலநடுக்கம்earthquake news today
Share
Tweet
SendShare
Previous Post

தீவிரவாதிகள் கைகளில் M4 carbine rifle கிடைத்தது எப்படி?

Next Post

காட்டிக்கொடுத்த சீன போன் : பஹல்காம் தீவிரவாதிகள் கொல்லப்பட்டது எப்படி?

Related News

காப்பீட்டு விநியோக விதிகளில் மாற்றம் : பாலிசிதாரர்களுக்கு அதிக நன்மை – சிறப்பு தொகுப்பு!

கான்பூர் தொழிலதிபர் கொலையில் திருப்பம் : குடி, சூதாட்டத்தால் கடனாளியான மகனே தீர்த்துக்கட்டியது அம்பலம் – சிறப்பு தொகுப்பு!

7 நாள் போர் நிறுத்த முன்மொழிவு நிராகரிப்பு மீண்டும் ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டம் – சிறப்பு தொகுப்பு!

அரிசி தட்டுப்பாட்டால் ரொட்டிக்கு மாறிய மக்கள் : கோதுமைக்காக இந்தியாவை நாடும் வங்கதேசம் – சிறப்பு தொகுப்பு!

தெற்காசியா மீண்டும் ஆபத்தான நிலையை எட்டாமல் இருக்க, காஷ்மீர் விவகாரத்திற்கு தீர்வு காண வேண்டும் : ஷெபாஸ் ஷெரீப் மறைமுக மிரட்டல்!

இந்தியாவுக்கு சாதகமா? பாதகமா? : பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ட்ரம்ப் – ஜி ஜின்பிங் சந்திப்பு – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றக்கோரி அக்.11-ல் ஆர்ப்பாட்டம் – இந்து முன்னணி அறிவிப்பு!

ஆர்.டி.ஐ சட்டத்தில் சட்டம் – ஒழுங்கு பிரிவுக்கு விலக்கு அளித்து பிறப்பிக்கப்பட்ட அரசாணை ரத்து!

ஏரியில் சட்டவிரோதமாக மணல் அள்ளிய விவகாரம் – எ.வ.வேலு மீது வழக்குப்பதிவு!

இந்தியாவுடன் மோத துணியும் பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் – பிரதமர் மோடி

ஓட்டுக்கு பணம் கொடுக்க மாட்டோம் என்று கூறிவிட்டு எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குகின்றனர் – தமிழிசை சௌந்தரராஜன்

கோவையில் உயிரை பணயம் வைத்து குட்கா கடத்தல் கும்பலை மடக்கி பிடித்த தலைமைக்காவலர் – குவியும் பாராட்டு!

தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பால் அம்பலமான ராகுலின் காந்தியின் நாடகம் – நயினார் நாகேந்திரன்!

தாராபுரம் இடைத்தேர்தல் மோதல் குறித்து காவல்துறை விசாரணை – அமைச்சர் சம்பத்குமார் தகவல்!

புதுச்சேரியில் மார்டின் அறக்கட்டளை சார்பில் இலவச UPSC பயிற்சி மையம் – துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் தொடங்கி வைத்தார்!

ஆசிய விளையாட்டு கபடி போட்டி ; மகளிர் அணியை தொடர்ந்து ஆடவர் அணியும் தங்கப் பதக்கம் வென்று சாதனை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies