ராமநாதபுரம் அரண்மனையை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டு, மன்னர் குடும்பத்தினருடன் கலந்துரையாடினார்.
“மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்” என்ற பெயரில் தமிழகம் முழுவதும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
இந்த நிலையில், ராமநாதபுரத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இபிஎஸ், ராமநாதபுரம் அரண்மனையைப் பார்வையிட்டு, இளைய மன்னர் நாகேந்திர சேதுபதி மற்றும் அவரது குடும்பத்தினரைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.
பின்னர், மறைந்த குமரன் சேதுபதியின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். முன்னதாக, அரண்மனைக்கு வந்த எடப்பாடி பழனிசாமிக்குப் பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது.