தஞ்சை மாவட்டத்தில் கொள்ளிடம் கரையோரம் உள்ள 27 கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
தஞ்சை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வேளாண் பொறியியல் துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், கொள்ளிடம் ஆற்றில் தண்ணீரின் அளவை தொடர்ந்து கண்காணித்து வருவதாக தெரிவித்தார்.
அதேபோல் கரையோர பகுதிகளில் உள்ள 27 கிராமங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார். மேலும் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கவும் ஆட்சியர் அறிவுறுத்தினார்.