பெங்களூருவில் பொது இடத்தில் அனுமதியின்றி வீடியோ எடுக்க முயன்ற ஜெர்மன் இன்ஸ்டாகிராம் பிரபலத்தை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஜெர்மனியைச் சேர்ந்த யூனஸ் ஸாரோ என்பவர் இன்ஸ்டாகிராமில் ஏராளமான சாகச வீடியோக்களை வெளியிட்டு 20 மில்லியன் பார்வையாளர்களை வைத்துள்ளார்.
இந்நிலையில் அவர் பெங்களூரு சர்ச் தெருவில் போக்குவரத்து நெரிசல் மற்றும் மக்கள் கூட்டம் நிறைந்து காணப்படும் பகுதியில் சாகச வீடியோ எடுக்கப் போவதாகப் பதிவிட்டு இருந்தார்.
இதைப் பார்த்த அவரது ரசிகர்கள் சர்ச் தெருவில் குவியத் தொடங்கினர். இதையறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, பொது இடத்தில் அனுமதியின்றி வீடியோ எடுக்க முயன்ற யூனஸ் ஸாரோவை கைது செய்து கூட்டத்தைக் கலைத்தனர்.