உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா நடத்திய ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களில் 8 பேர் உயிரிழந்தனர்.
309 ஷாஹெத் மற்றும் டெகாய் ட்ரோன்கள் மூலமாகவும், 8 இஸ்காந்தர் ஏவுகணைகள் மூலமாகவும், ரஷ்யா தாக்குதல் நடத்த முற்பட்ட நிலையில், அவற்றில் 288 ட்ரோன்கள் மற்றும் 3 ஏவுகணைகளை உக்ரைனின் வான் பாதுகாப்பு அமைப்பு தகர்த்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.