ஜெர்மனியில் 12 பபூன் குரங்குகள் சுட்டுக் கொல்லப்பட்டதைக் கண்டித்து சமூக ஆர்வலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நியூரம்பெர்க்கில் மிருகக்காட்சி சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு இடப்பற்றாக்குறை காரணமாக 12 பபூன் குரங்குகள் சுட்டுக் கொல்லப்பட்டன.
இதனையறிந்த சமூக ஆர்வலர்கள் மிருகக்காட்சி சாலை முன்பு அமர்ந்து பதாகைகளை ஏந்தி போராட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் குண்டுகட்டாக தூக்கி கைது செய்தனர்.