திமுக-வின் கொடுங்கோல் ஆட்சி என பாமக தலைவர் அன்புமணி குற்றம் சாட்டியுள்ளார்.
கும்மிடிப்பூண்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக அமைச்சர்கள் வியாபாரிகள் போல் செயல்பட்டு வருவதாக தெரிவித்தார்.
சமூக நீதி பற்றி பேச முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தகுதியில்லை எனறும், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் உரிமை பற்றி விவாதிக்க முதலமைச்சருக்கு தைரியம் இல்லை என்றும் சாடினார்.
நேரடி கடன் சுமையை 9 லட்சத்து 30 ஆயிரம் கோடியாக திமுக அரசு உயர்த்தியுள்ளதாகவும், திமுக ஆட்சியில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்து சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அன்புமணி குற்றம்சாட்டினார்