மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்தை கைது செய்யக் கோரி அழுத்தம் தரப்பட்டதாக மகாராஷ்டிரா பயங்கரவாத எதிர்ப்புப் படையில் பணியாற்றிய முன்னாள் காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கின் தீர்ப்புக்கு மகாராஷ்டிரா பயங்கரவாத எதிர்ப்புப் படையின் முன்னாள் காவல்துறை அதிகாரி மெஹிபூப் முஜாவர் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
அதில், ஒரு போலி அதிகாரி செய்த போலி விசாரணையைத் தீர்ப்பு அம்பலப்படுத்தியுள்ளதாகக் கூறியுள்ளார்.
ராம் கல்சங்கரா, சந்தீப் டாங்கே, திலீப் படிதர் மற்றும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் ஆகியோரை மாலேகான் வழக்கில் இணைக்க ரகசிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
மோகன் பகவத்தை கைது செய்வது தனது திறனுக்கு அப்பாற்றப்பட்டது எனக்கூறியதால் தன் மீது பொய் வழக்குப்பதிவு செய்யப்பட்டதாகவும், மாலேகான் வழக்கில் நடவடிக்கை எடுக்காததால் தனது 40 ஆண்டுக்கால வாழ்க்கையை அழித்துவிட்டது எனவும் கூறியுள்ளார்.
மேலும், காவி பயங்கரவாதம் இல்லை எனவும் முன்னாள் காவல்துறை அதிகாரி மெஹிபூப் முஜாவர் தெரிவித்துள்ளார்.