கர்நாடகாவில் பணிப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் எம்பி பிரஜ்வல் ரேவண்ணா குற்றவாளி என சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஹாசன் மாவட்டம் ஹொளே நரசிபுராவில் பணிப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக, முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் முன்னாள் எம்பியுமான பிரஜ்வல் ரேவண்ணா, கடந்தாண்டு கைது செய்யப்பட்டார்.
ஓராண்டாக நடைபெற்ற வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவரை நீதிபதி முன்பு, போலீசார் அஜர்படுத்தினர்.
வழக்கின் வாதங்களையும், ஆவணங்கள் குறித்தும் விசாரித்த நீதிபதி, பிரஜ்வல் ரேவண்ணா குற்றவாளி எனத் தீர்ப்பளித்தார். மேலும் அவருக்கான தண்டனை விபரம் நாளை அறிவிக்கப்படும் எனவும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி கஜானன் பட் தெரிவித்துள்ளார்.