ஜப்பானைச் சுற்றியுள்ள கடல் கொந்தளிக்கும் என புதிய பாபா வாங்கா தனது புத்தகத்தில் கூறியிருந்தது அப்படியே பலித்திருப்பது இணையத்தில் விவாதப் பொருளாக மாறியுள்ளது. தீர்க்கதரிசிகளான பாபா வாங்கா மற்றும் நாஸ்ட்ராடமஸின் கணிப்புகள் உண்மையிலேயே பலித்து வரும் நிலையில், இதுதொடர்பான தேடல்கள் இணையத்தை ஆக்கிரமித்துள்ளன..
இயற்கைப் பேரழிவுகள் கணிக்க முடியாதது… ஆனால், 16ம் நூற்றாண்டில் வாழ்ந்த பிரான்ஸின் நாஸ்ட்ராடமஸ் மற்றும் பல்கோரியாவின் பாபா வாங்கா போன்ற தீர்க்கதரிசிகளின் சில கணிப்புகள் ஒரே மாதிரி இருப்பதும், அவை நடப்பதும் வியப்பிலும் வியப்புதான். குறிப்பாக 2025ம் ஆண்டு உலகின் ஆதிக்க சக்தியாக இருக்கும் நாடு மாறும் என்றும், ஐரோப்பாவில் பெரும் போர் வெடிக்கும் என்றும், இருவரும் கணித்திருந்ததும், அவை நடப்பதும் கண்கூடாகப் பார்க்க முடிகிறது.
குறிப்பாக ஜூலையில், ஜப்பானைச் சுற்றி கடல் கொந்தளிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தது அப்படியே நடந்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இது எப்படி சாத்தியம் என்று பலரும் கேள்விக் கணைகளைத் தொடுத்து வருகின்றனர்.
பல்கேரியாவைச் சேர்ந்த பாபா வாங்கா எழுதி 1999ம் ஆண்டு வெளியான ‘The Future I Saw” புத்தகத்தில் ஜூலை 5ம் தேதி ஜப்பானைச் சுற்றியுள்ள கடல் கொந்தளிக்கும், நிலநடுக்கம் ஏற்படும் என்ற கணிப்பு இடம்பெற்றிருந்தது.
இந்த சம்பவங்கள், குறிப்பிட்ட தேதியில் நடைபெறாவிட்டாலும், ரஷ்யாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கமும், அதன் தாக்கத்தால் ரஷ்யா, ஜப்பானைச் சுற்றி ஏற்பட்ட சுனாமியும் அவரது கணிப்பையே பிரதிபலிப்பதாகப் பலரும் நம்புகின்றனர். இதேபோன்று, ஆசியாவில் நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் பாதிப்பு ஏற்படக் கூடும் என நாஸ்ட்ராடமஸூம் கணித்திருந்த நிலையில், இது சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது.
செப்டம்பர் 11 தாக்குதல், இளவரசி டயானாவின் மரணம், செர்னோபில் டிசாஸ்டர் போன்ற சம்பவங்களைப் பாபா வாங்கா முன்னரே கணித்தவர். 2025-ம் ஆண்டு ஐரோப்பாவில் மக்கள் தொகையைப் பாதிக்கும் அளவு மிகப் பெரிய போர் நடக்கும் என்றும், பெரிய சக்தியாக ரஷ்யா எழுச்சி பெறும் என்பதும், அமெரிக்காவின் மேற்கு கடற்கரையோரத்தில் இயற்கை பேரிடர்கள் ஏற்படும் என்பதும் பாபா வாங்காவின் கணிப்பு.
2026ம் ஆண்டில் அறிவியல் சமூகம் செயற்கை முறையில் உடல் உறுப்புகளை உருவாக்கும் முயற்சியில் ஈடுபடும் என்று அவர் கூறியது உண்மையாக இல்லாவிட்டாலும், ஜப்பான் மற்றும் அமெரிக்கா நாடுகளில் சிறுநீரகம், கல்லீரல் திசுக்களை உருவாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது பாபா வாங்காவின் கணிப்புக்கு வலுசேர்த்துள்ளதாகப் பார்க்கப்படுகிறது.