வாரணாசியில் 2 ஆயிரத்து 200 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட பணிகளை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் இன்று நடைபெறவுள்ள அரசு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கவுள்ளார். 2 ஆயிரத்து 200 கோடி ரூபாய் மதிப்பிலான மேம்பாட்டு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவுள்ள பிரதமர் மோடி, நிறைவடைந்த பல திட்டங்களையும் தொடங்கி வைக்கவுள்ளார்.
அத்துடன், நாடு முழுவதும் உள்ள 9 கோடியே 70 லட்சம் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு, 20 ஆயிரத்து 500 கோடி ரூபாயையும் பிரதமர் மோடி விடுவிக்க உள்ளார்.