ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே கீழ்பவானி வாய்க்கால் பாலத்தில் ஏற்பட்ட பழுதால் அதிகப்படியான தண்ணீர் வெளியேறி வருகிறது.
தொட்டிப் பாலத்தின் கீழ்ப் பகுதி பக்கவாட்டில் ஏற்கனவே பழுது ஏற்பட்ட இடத்தில் கடந்த மாதம் கான்கிரீட் தளம் அமைத்துச் சரி செய்யும் பணி நடைபெற்றது.
ஆனால், அதே இடத்தில் மீண்டும் நீர் கசிந்து வருகிறது. இதனைச் சீரமைக்கும் பணியில் பொதுப்பணித்துறை, செயற்பொறியாளர் உள்ளிட்டோர் ஈடுபட்டுள்ளனர்.