பிரமிடுகளை விட பழமையானதா? : 6000 ஆண்டுகள் பழமையான நகரம் கண்டுபிடிப்பு!
Aug 6, 2026, 07:24 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

பிரமிடுகளை விட பழமையானதா? : 6000 ஆண்டுகள் பழமையான நகரம் கண்டுபிடிப்பு!

Murugesan M by Murugesan M
Aug 2, 2025, 12:37 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கடலுக்கு அடியில் மூழ்கிக் காணாமல் போன நகரம் ஒன்று கியூபாவில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது ஆய்வாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. பிரமிடுகளை விடப் பழமையானது என்பது உறுதிப்படுத்தப்பட்டால், மனித வரலாற்றை மாற்றியமைக்கக் கூடும் என்றும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

1960ம் ஆண்டுகளில் கியூபாவின் டெல் ரியோ மாகாணத்தில் உள்ள குவானாஹகாபிபப்ஸ் தீபகற்பத்தின் கரையின் மிகப்பெரிய கட்டமைப்பு கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பான மர்மங்களுக்கு விடை கிடைக்காத நிலையில், விவாதங்கள் பல ஆண்டுகளாக நீடித்தே வந்தன.

இந்நிலையில்தான், கடலுக்குள் அடியில் நகரம் போன்ற மிகப்பெரிய கட்டமைப்பு இருப்பதைக் கனடாவைச் சேர்ந்த கடற்பொறியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். 20 ஆண்டுகளுக்கு முன்னர் கனடாவைச் சேர்ந்த கடல் பொறியாளர்களான (Paulina Zelitsky) பௌலினா ஜெலிட்ஸ்கி மற்றும் (Paul Weinzweig) பால் வெயின்ஸ்வீக் இருவரும்,  கியூபாவின் கடல்தளத்தை வரைபடமாக்கும் பணியை மேற்கொண்டிருந்தனர். கடந்த 2001ம் ஆண்டு சோனார் ஸ்கேன்கள் உதவியுடன் கடல் தளத்தைப் பார்வையிட்டபோது, 2000 அடி ஆழத்தில் கடலுக்கு அடியில் நகரத்தைப் போன்ற ஒரு கட்டமைப்பு ஒன்று அவர்களது கண்களில் சிக்கியது.

பிரமீடுகள், சாலைகள், கட்டடங்கள் என ஒவ்வொன்றும் நேர்த்தியாக இருந்த கட்டமைப்பு  அதன் நம்பகத்தன்மை பற்றிய விவாதங்களைத் தூண்டியுள்ளது. 6000 ஆண்டுகளுக்கு முந்தியதாகக் கருதப்படும் இந்த அமைப்பு, பண்டைய நாகரிகத்தின் சான்றா அல்லது இயற்கையாக உருவானதா என்ற இருவேறு கேள்விகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

குறிப்பாக, இந்த அமைப்பு கடலுக்கு அடியில் உள்ள எரிமலை வெடிப்பு அல்லது நிலவியல் செயல்பாடுகளால் உருவாகியிருக்கலாம் என்று ஒரு சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இருப்பினும், இந்த மர்மம் இன்னும் முழுமையாகத் தீர்க்கப்படவில்லை. ஆனால் இதனை மறுத்துள்ள கடற்பொறியாளர் ஜெலிட்ஸ்கி, மிகவும் நேர்த்தியாகக் கட்டமைக்கப்பட்ட இந்த கட்டமைப்பு உண்மையிலேயே ஒரு அற்புதமான அமைப்பு என்றும், இது ஒரு பெரிய நகர்ப்புற மையமாக இருந்திருக்க வாய்ப்புள்ளதாகவும் தெளிவுபடுத்தியுள்ளார்.

நீரில் மூழ்கிய இந்த அமைப்பு உண்மையில் பழங்கால நகரத்தின் சான்றாக இருக்குமாயின்,மனித நாகரிகம் உண்மையிலேயே எவ்வளவு பழமையாக இருந்திருக்கக் கூடும் என்று எதிர்பார்ப்பை புவியியல் ஆய்வாளர்களிடையே எழுப்பியுள்ளது. எகிப்திய பிரமிடுகளை விடப் பழமையானது என்பது உறுதிப்படுத்தப்பட்டால், மனித வரலாற்றை மாற்றியமைக்கக்கூடும் என்றும் நம்பப்படுகிறது.

Tags: Older than the pyramids?: 6000-year-old city discovered6000 ஆண்டுகள் பழமையான நகரம் கண்டுபிடிப்பு
Share
Tweet
SendShare
Previous Post

ஈரோடு : பாலத்தில் ஏற்பட்ட பழுதால் அதிகமாக வெளியேறும் தண்ணீர்!

Next Post

திண்டுக்கல் : ஏ++ சான்றிதழ் பெற்ற காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகம்!

Related News

திருப்பி அடிக்கும் கர்மா – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பரவும் புரட்சித் தீ : கதிகலங்கி நிற்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவுடன் நெருங்கும் ஆஃப்கன் : புலம்பி தவிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

எச்சரிக்கை மணி அடிக்கும் ஸ்பெயின் ஊடுருவல் பிரச்னை : அகதிகள் சிக்கலை இந்தியா எதிர்கொள்வது எப்படி? – சிறப்பு தொகுப்பு!

தங்க மங்கைக்கு நேரில் அழைத்து பாராட்டு; சிறப்பித்த அமைச்சர் மன்சுக் மாண்டவியா

ஈரான் மீதான தாக்குதல் தற்காலிமாக நிறுத்தம் – ட்ரம்ப் அறிவிப்பு!

கடல்வழியாக அலை அலையாக குவியும் மொராக்கோ அகதிகள் : ஸ்பெயின் எல்லையில் பதற்றம் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

600 கோடி ரூபாய் மதிப்பில் மண் வள பாதுகாப்பு திட்டம்; பட்ஜெட்டில் அறிவிப்பு

முதலமைச்சரை புகழ்ந்து அமைச்சர் வினோத்; எதிர்கட்சிகள் கூச்சலிட்டதால் சலசலப்பு

திருப்பூரில் 10 கோடி மதிப்பில் டெக்ஸ்டைல் டெக்னாலஜி சென்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

விவசாய பயிர்கடன் தள்ளுபடிக்கு 5,932 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

சென்னையில் அனைத்து வீடுகளிலும் ஸ்மார்ட் மீட்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

பள்ளிக்கல்வித்துறைக்கு 44, 527 கோடி ஒதுக்கீடு : பட்ஜெட்டில் அறிவிப்பு!

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைக்கு 2,022 கோடி – நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு!

தமிழகத்தை 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற இலக்கு – மரிய வில்சன் உறுதி!

தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கு 560 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies