திண்டுக்கல் அருகேயுள்ள காந்திகிராம கிராமிய நிகர்நிலை பல்கலைக்கழகம், நாக் வழங்கக்கூடிய ஏ++ சான்றிதழ் பெற்றுள்ளது.
சின்னாளப்பட்டி அருகே காந்தி கிராம கிராமிய நிகர்நிலை பல்கலைக்கழகம் உள்ளது. இங்குத் தேசிய தர நிர்ணயக் குழுமம் மூன்று நாட்களாக ஆய்வு மேற்கொண்டனர்.
இதனை தொடர்ந்து பாடத் திட்டம், கற்பித்தல் முறை, ஆராய்ச்சி, விரிவாக்கம், நிர்வாகம் என அனைத்திலும் சிறப்பாக விளங்குவதால் ஏ++ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.