ஜவான் படத்திற்காகச் சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்ற ஷாருக்கானிற்கு அப்படத்தின் இயக்குநர் அட்லீ வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், ஜவான் படத்திற்காகத் தேசிய விருது பெற்றதில் மிகவும் மகிழ்ச்சியடைவதாகவும், தங்கள் பயணத்தில் ஒரு பகுதியாக இருப்பது மிகவும் ஊக்கமளிப்பதாக உணர்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தன் மீது நம்பிக்கை வைத்துப் படத்தை வழங்கியதற்கு நன்றியென நடிகர் ஷாருக்கானுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து இயக்குநர் அட்லீ நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.