ரஷ்யா - அமெரிக்கா இடையே போர்? - சிறப்பு தொகுப்பு!
Oct 28, 2026, 12:34 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

ரஷ்யா – அமெரிக்கா இடையே போர்? – சிறப்பு தொகுப்பு!

Murugesan M by Murugesan M
Aug 3, 2025, 08:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ரஷ்யா மற்றும் அமெரிக்காவின் தற்போதைய நடவடிக்கைகள், இரு நாடுகள் இடையேயான போருக்கு வழிவகுக்கும் என அஞ்சப்படுகிறது. இது குறித்த செய்தி தொகுப்பை தற்போது பார்க்கலாம்.

ரஷ்யா – உக்ரைன் இடையேயான போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.
உக்ரைன் மீதான போரை நிறுத்த வேண்டும் என அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்தி வந்த போதிலும், ரஷ்யா அதனைச் செவி கொடுத்து கேட்பதாக தெரியவில்லை.

மாறாக, தனது தாக்குதலின் வீரியத்தை அந்நாடு அதிகரித்து வருகிறது. இதனால், ஆத்திரமடைந்த அமெரிக்கா, ரஷ்யா மீது பொருளாதாரத் தடை விதித்ததுடன், அந்நாட்டுடன் வணிக செய்யும் நாடுகள் மீது அதிக வரி விதித்து வருகிறது.

மேலும், ரஷ்யா இன்னும் 50 நாட்களில் போரைக் கைவிட வேண்டும். இல்லாவிட்டால், கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என டிரம்ப் அண்மையில் எச்சரிக்கை விடுத்தார். இதற்குப் பதிலளித்த ரஷ்ய முன்னாள் அதிபர் டிமிட்ரி மெட்வதேவ், ரஷ்யா ஒன்றும் இஸ்ரேலோ, ஈரானோ கிடையாது எனவும், ட்ரம்ப் விடுக்கும் எச்சரிக்கை அந்நாட்டின் மீதான போருக்கு வழிவகுக்கும் எனவும் தெரிவித்தார்.

இந்த பேச்சால் சீண்டப்பட்ட ட்ரம்ப், ரஷ்யாவை நோக்கி 2 அணுஆயுத நீர் மூழ்கி கப்பல்களை அனுப்ப ஆணையிட்டார். இதற்குப் பதிலளித்த ரஷ்யா, அமெரிக்காவைக் காட்டிலும் தங்களிடம் அதிக அணுஆயுத நீர் மூழ்கி கப்பல்கள் உள்ளதாகத் தெரிவித்தது.

அத்துடன், ஒலியைப் போன்று  10 மடங்கு வேகத்தில் பயணிக்கக் கூடிய ஆரெஷ்னிக் ஏவுகணைகளை பெலாரஸ் நாட்டில் நிலைநிறுத்தவும் ரஷ்யா முடிவு செய்துள்ளது. ரஷ்யாவின் அண்டை நாடான பெலாரஸ் நாட்டை சுற்றி நேட்டோ பல நாடுகள் உள்ளன. எனவே, அந்த நேட்டோ நாடுகளையும், அமெரிக்காவையும் அச்சுறுத்தும் வகையில் ஆரெஷ்னிக் ஏவுகணைகளை பெலாரசில் நிலைநிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்துப் பேட்டியளித்த ரஷ்ய அதிபர் புதின், ராணுவப் பணியில் ஆரெஷ்னிக் ஏவுகணைகள் முழுமையாக இணைக்கப்பட்டுள்ளதாகவும், இந்தாண்டு இறுதியில் அவை பெலாரஸில் நிலைநிறுத்தப்படும் எனவும் கூறினார்.

ஆரெஷ்னிக் ஏவுகணைகள், உலகின் எந்த வான்பாதுகாப்பு தளவாடத்தாலும் இடைமறிக்க முடியாதவை. இதன் காரணமாக அவற்றை உலக நாடுகள் அஞ்சி வருகின்றன. அத்தகைய ஏவுகணைகளை நேட்டோ நாடுகளின் எல்லையில் நிலைநிறுத்துவது தற்போதுள்ள பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது.

ரஷ்யாவின் இத்தகைய போக்கு, உக்ரைன் போர் முடிவுக்கு வருவதைத் தடுப்பதுடன்,  மற்ற நாடுகளுடன் போர் ஏற்படும் சூழலை ஏற்படுத்தும் எனக் கருதப்படுகிறது. குறிப்பாக, அமெரிக்கா, ரஷ்யா இடையேயான நேரடி போராகவும் இது மாற வாய்ப்புள்ளதாக வல்லுநர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

Tags: War between Russia and America?ரஷ்யா - அமெரிக்கா இடையே போர்?ரஷ்யா - அமெரிக்காரஷ்யா - உக்ரைன்
Share
Tweet
SendShare
Previous Post

குரங்கணி அருகே சீமான் போராட்டம் – சுற்றுலா பயணிகள் அவதி!

Next Post

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!

Related News

பிரதமர் நாற்காலியை முடிவு செய்யும் கூட்டணி : இஸ்ரேல் அரசியலை தீர்மானிக்கும் தேர்தல் கணக்கு – சிறப்பு தொகுப்பு!

2026ம் ஆண்டுக்குள் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அமல்படுத்தப்படும் : பியூஷ் கோயல் நம்பிக்கை : சிறப்பு தொகுப்பு!

இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல் – விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

ஐரோப்பாவை சீர்குலைத்த போராட்டம் : உலகளாவிய நெட்வொர்க்கின் அதிர்ச்சி பின்னணி – சிறப்பு தொகுப்பு!

மதுரை – குருவாயூர் ரயிலில் ‘விஸ்டாடோம்’ பெட்டி : மேற்கு தொடர்ச்சி மலையின் அழகை ரசிக்கும் பயணிகள் சிறப்பு தொகுப்பு!

மேற்காசிய போருக்கு முடிவு எப்போது? அடிபணிய மறுக்கும் ஈரான் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அன்பில் மகேஷ் கைதின் போது போலீசாருடன் வாக்குவாதம் – சேகர்பாபு மீது வழக்குப்பதிவு!

ரயிலில் பட்டாசு எடுத்து சென்றால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை : ரயில்வே பாதுகாப்புப் படை எச்சரிக்கை!

இன்றைய தங்கம் விலை!

கோயிலுக்குள் யாரை அனுமதிக்கலாம் – உயர் நீதிமன்ற மதுரை கிளை விளக்கம்!

மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலைக்கும், கொள்முதல் விலைக்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் இருப்பது ஏன்? – உச்ச நீதிமன்றம் கேள்வி!

குற்ற வழக்கு நிலுவையில் இருப்பதை காரணம் காட்டி வெளிநாடு செல்லும் உரிமையை மறுக்கக் கூடாது – உயர் நீதிமன்றம்

அதிக மின் கட்டணம் விதிப்பு – சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

தமிழகத்தில் 13 ஆண்டுகளுக்கு பின் ஆட்டோ கட்டணம் உயர்வு!

காவிரியில் உரிய நீரை கர்நாடகா திறக்கவில்லை – உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு அவசர மனுத்தாக்கல்!

ஆந்திராவில் கரையை கடக்க தொடங்கியது அர்னாப் புயல் – மணிக்கு 125 முதல் 135 கி.மீ வேகத்தில் பலத்த காற்று!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies