"நிசார்' வடிவமைப்பில் முக்கிய பங்காற்றிய சென்னை ஐஐடி பேராசிரியர்!
Oct 6, 2026, 09:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

“நிசார்’ வடிவமைப்பில் முக்கிய பங்காற்றிய சென்னை ஐஐடி பேராசிரியர்!

Murugesan M by Murugesan M
Aug 2, 2025, 08:15 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அண்மையில் இஸ்ரோவும் நாசாவும் இணைந்து அனுப்பிய நிசார் செயற்கைக்கோளை வடிவமைப்பதில், சென்னை ஐஐடியின் பேராசிரியர் ஒருவர் மிக முக்கிய பங்களிப்பாற்றியுள்ளார். அவர் யார்? அவரின் பங்களிப்பென்ன என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.

புவியின் மேற்பரப்பை முழுமையாகக் கண்காணிக்கும் நோக்கில், ஜூலை 30ம் தேதி  ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஜிஎஸ்எல்வி எப்-16 ராக்கெட் மூலம் நிசார் செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டது.  இஸ்ரோ மற்றும் நாசா விஞ்ஞானிகள் இணைந்து உருவாக்கிய இந்த செயற்கைக்கோளின் மதிப்பு 12 ஆயிரம் கோடி ரூபாய்.

புவியைக் கண்காணிக்க இதற்கு முன்னரும் ஏராளமான செயற்கைக்கோள்கள் அனுப்பப்பட்டுள்ளன. ஆனால், அவற்றைக் கொண்டு புவியின் மேற்பரப்பைத் துல்லியமாகப் படம் எடுப்பதில் சிக்கல் இருந்து வந்தது. மேகமூட்டம் உள்ளிட்ட காரணங்களில் செயற்கைக்கோளின் செயல்பாடு பாதிக்கப்பட்டது.

ஆனால், இந்த குறையை, சென்னை ஐஐடியை சேர்ந்த பேராசிரியர் ஒருவர் நீக்கியுள்ளார். அவரது பெயர், மணிகண்டன் மாத்தூர். விண்வெளி பொறியியல் துறையைச் சேர்ந்த அவர், இஸ்ரோ மற்றும் நாசா விஞ்ஞானிகளுடன் இணைந்து நிசார் செயற்கைக்கோளின் வடிவமைப்பில் பணியாற்றினார்.

அவர் வழங்கிய ஆலோசனைகள் மூலம், புவியின் மேற்பரப்பில்  10 மீட்டர் அளவிலான சிறிய இடங்களைக் கூட துல்லியமாகப் படம் பிடிக்கும் வகையில் நிசார் செயற்கைக்கோள் உருவாக்கப்பட்டுள்ளது. அந்த சிறிய இடத்தில் நிகழும் சில சென்டிமீட்டர் அளவிலான மாற்றங்களைக்கூட நுட்பமாக ஆய்வு செய்யவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மேலும், வட இந்தியப் பெருங்கடலோர பகுதிகளைத் துல்லியமாகப் படம் எடுக்க வேண்டியதன் அவசியம் குறித்தும், கடலோரப் பகுதிகளை எப்போது, எந்த எண்ணிக்கையில் படங்கள் எடுக்க வேண்டும் என்பது குறித்தும் பேராசிரியர் மணிகண்டன் ஆலோசனை வழங்கியுள்ளார். நிசார் செயற்கைக்கோள் ஒருமுறை படம் எடுத்தால், அந்த இடத்தை அடுத்த 12 நாட்கள் கழித்து மீண்டும் படம் எடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இப்படி நிசார் செயற்கைக்கோளின் செயல்பாட்டில் பேராசிரியர் மணிகண்டனின் பங்கு அளப்பறியது.

ஆலோசனை வழங்கியதுடன் பேராசிரியர் மணிகண்டனின் பணி முடியவில்லை. செயற்கைக்கோள் அனுப்பும் தகவல்களை, அவரும் அவரது குழுவினரும் ஆய்வு செய்ய உள்ளனர். குறிப்பாக, வங்காள விரிகுடாவில் நதி நீர் கலக்கும் விதம் குறித்தும், இந்தியக் கடலோரப் பகுதியில் ஏற்படும் உள் ஈர்ப்பு அலைகள் குறித்தும், இவற்றால் வானிலையில் எத்தகைய மாற்றங்கள் நிகழ்கிறது என்பது குறித்தும், ஆய்வு மேற்கொள்ளவுள்ளனர்.

இது குறித்துப் பேட்டியளித்த அவர், செயற்கைக்கோள் படங்களைக் கொண்டு என்னென்ன பணிகளை மேற்கொள்ள முடியும் என்பது குறித்த புதிய விழிப்புணர்வு இனி இந்திய அறிவியல் சமூகத்தில் ஏற்பட உள்ளதாகக் கூறினார். நிசார் செயற்கைக்கோளை உருவாக்குவதில் துணைநின்ற பேராசிரியர் மணிகண்டனால், ஐஐடி மெட்ராஸ் மட்டுமல்ல, தமிழகமும் பெருமை கொள்கிறது.

Tags: நாசாஜிஎஸ்எல்வி எப் -16 ராக்கெட்IIT Chennai professor who played a key role in designing "Nisar"நிசார்சென்னை ஐஐடி பேராசிரியர்இஸ்ரோIIT Chennai
Share
Tweet
SendShare
Previous Post

விவசாயத்தை கைவிடும் விவசாயிகள் : பாசன கால்வாய்களில் கலக்கும் – கழிவுநீரால் நிலத்தடி நீர் பாதிப்பு!

Next Post

பாரதத்தின் வடக்கையும், தெற்கையும் மாமன்னர் ராஜேந்திர சோழன் இணைத்தார் – பிரதமர் மோடி

Related News

ஜெம் கிரானைட் வீரமணி வழக்கில் ஓட்டுநர்கள் 3 பேர் கைது; சாட்டையை சுழற்றிய புலனாய்வு குழு

தாராபுரம், மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தல் – அனைத்து ஏற்பாடுகளும் தயார்!

ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்; முடங்கிய மீன்பிடி தொழில்

41 ஆண்டுகளாக தமிழகத்தை வஞ்சிக்கும் கேரளா; விவசாயிகள் குற்றச்சாட்டு

மனைவி உட்பட 3 பெண்களை கொலை செய்தவருக்கு 3 ஆயுள்; சிவகங்கை நீதிமன்றம் அதிரடி

துவரம் பருப்பு கொள்முதல் விலையை குறைத்த தவெக அரசு – ரூ. 187 கோடி சேமிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மீண்டுமொரு எமர்ஜென்சி லேண்டிங்; யூ-டர்ன் அடித்த பிரிட்டிஸ் ஏர்வேஸ் விமானம்

வாடிக்கையாளர் சேவைக்கான Chatbot-களைப் பயன்படுத்தும் UPI;ஒட்டுமொத்தக் கட்டமைப்பையும் மாற்றும் AI

இந்தியா வந்துள்ள சுவிட்சர்லாந்து அதிபர்; பிரதமர் மோடியுடன் சந்திப்பு

அமைச்சர்கள் ஆதவ் அர்ஜூனா, நிர்மல்குமார் மீது அவதூறு வழக்கு; திமுகவுக்கு உயர்நீதிமன்றம் அனுமதி

சுவிட்சர்லாந்து அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு – முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல்வருடன் விருந்து – அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தகவல்!

திருப்பதி அருகே பாகனை தாக்கிய பத்மாவதி அம்மன் கோயில் யானை!

அமெரிக்கா, இஸ்ரேலிய விமான நிறுவனங்கள் மீது தாக்குதல் தொடர வேண்டும் – அல்-கொய்தா கிளை அமைப்பு அழைப்பு!

கமலாலயத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட பாஜக மேலிட பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் – நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்பு!

அரசியல் மாநாடு போல் நடைபெற்ற சிவகார்த்திகேயன் நற்பணி இயக்க நிர்வாகிகள் சந்திப்பு விழா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies