ஆணவ கொலை இன்று வரை நடைபெறுவதற்கு திமுக அரசு வெட்கித் தலைகுனிய வேண்டும் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தமிழக மக்கள் அவர்களின் வாழ்க்கையை வாழ தினம் தினம் போராட வேண்டியுள்ளதாக தெரிவித்தார்.
மத்திய அரசை குறை சொல்வதே முதலமைச்சர் ஸ்டாலினுக்கு வழக்கம் என்றும், மோதல் போக்கை கடைபிடிப்பது நல்லது இல்லை என முதலமைச்சர் புரிந்து கொள்ள வேண்டும் எனவும் அவர் கூறினார்.
5 முறை ஆட்சி செய்தும் சமூக நீதியை நிலை நாட்டவில்லையா என்றும் தமிழிசை கேள்வி எழுப்பினார்.