தேனி மாவட்டம் போடி அருகே நாம் தமிழர் கட்சி சார்பில், நாட்டு மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து செல்லும் போராட்டம் நடைபெற்றது.
நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நாட்டு இன மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து செல்லும் போராட்டம் நடைபெற்றது. தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே நடைபெற்ற போராட்டத்தில் சுமார் 2 ஆயிரம் நாட்டு இன மாடுகள் 2 கிலோ மீட்டர் தூரம் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டனர்.
இதைத்தொடர்ந்து தடையை மீறி மலை மீது மாடுகளை ஓட்டிச்சென்ற சீமானை வனத்துறையினர் தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இருப்பினும் அனைத்து மாடுகளையும் மேய்ச்சலுக்காக சீமான் மலை மீது ஓட்டிச் சென்றார்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சீமான், நாட்டு இன மாடுகளை மலை மேல் ஏற்றிச் செல்ல தடை விதித்தால், மீண்டும் போராட்டம் நடத்துவோம் என எச்சரிக்கை விடுத்தார்.
மாடுகளை மலை மேல் ஏற்றிச்செல்ல தடை விதித்த அரசு, மாற்று இடத்தை அறிவிக்காதது ஏன் எனவும் கேள்வி எழுப்பினார்.