டெல்லியில் குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்த பிரதமர் மோடி, முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
நாட்டின் 79வது சுதந்திர தினம், வரும் 15ம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில் இந்த சந்திப்பு நடைபெற்றது. அப்போது, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர், ஆப்ரேஷன் மகாதேவ் உள்ளிட்டவை குறித்து இருவரும் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா 25 சதவீதம் வரி விதித்தது, குடியரசு துணை தலைவர் தேர்தல், வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் உள்ளிட்டவை குறித்தும் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் குடியரசுத் தலைவரை சந்தித்தார்.