ஓ.பன்னீர்செல்வம் எடுத்துள்ள முடிவு நல்லதல்ல என பாஜக மேலிட பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி தெரிவித்துள்ளார்.
தென் மாவட்டங்களில் நடைபெறும் கட்சி நிகழ்வில் பங்கேற்பதற்காக பாஜக மேலிட பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி ஹைதராபாத்தில் இருந்து விமான மூலம் மதுரை வந்தடைந்தார். விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து அவர். எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அர்த்தமற்ற, சம்பந்தம் இல்லாத வார்த்தைகளை பேசி வருகிறார். மனோகர் பரிகர் மற்றும் அருண் ஜெட்லி குறித்து அவர் பேசியிருப்பது கண்டனத்திற்குரியது என தெரிவித்தார்.
ஆபரேஷன் சிந்து குறித்து பேசி வீரர்களின் உணர்ச்சிகளை காயப்படுத்துகிறார். அவர் எப்போதெல்லாம் வெளிநாட்டில் கால் வைக்கிறாரோ அப்போதெல்லாம் ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பு சரியாக இல்லை என்று பேசி வருகிறார். மக்கள் அவர் பேச்சில் அதிருப்தி அடைந்திருக்கிறார்கள். அவருக்கு தலைவராக இருப்பதற்கு தகுதி இல்லை என்றும் கூறினார்.
ஓபிஎஸ் எடுத்துள்ள முடிவு இனிமையாக இல்லை அவர் எப்போதும் திமுகவிற்கு எதிராக பேசியிருக்கிறார். அனைவருக்கும் முடிவெடுக்க தனித்தனி விருப்பங்கள் உண்டு அதில் கருத்து சொல்ல நான் விரும்பவில்லை. ஓபிஎஸ் மீண்டும் இணைவது குறித்து காலம்தான் முடிவு செய்யும் என்றும் சுதாகர் ரெட்டி தெரிவித்தார்.