தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை காரணமாக வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
திருவண்ணாமலை மற்றும் வேங்கிக்கால், ஆடையூர், புனல்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது.
அரை மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்த நிலையில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதேபோல் செங்கம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரவு நேரத்தில் 3 மணி நேரமாகக் கனமழை பெய்தது. இதனால் ஏரிகளில் நீர்மட்டம் உயரும் நிலையில் ஆடிமாத சாகுபடி அதிகரிக்கும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது.
காவேரிப் பட்டினம், ஓசூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்த நிலையில் கிருஷ்ணகிரி – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தண்ணீர் தேங்கியது.