ஜார்க்கண்ட் மாநிலம் தியோகரில் உள்ள பாபா பைத்யநாத் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு மேற்கொண்டனர்.
சவான் மாத கடைசி திங்கட்கிழமையை ஒட்டி வடமாநிலங்களில் உள்ள சிவாலயங்கள் பக்தர்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர்.
அந்த வகையில் ஜார்க்கண்ட் மாநிலம் தியோகரில் உள்ள 12 ஜோதிர்லிங்கங்களில் ஒன்றான பாபா பைத்யநாத் சிவன் கோயில் அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். தொடர்ந்து நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.