டெல்லி இந்தர்லோக் பகுதியில் செயல்பட்டு வரும் காலணி சந்தையில் நள்ளிரவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
இந்தர்லோக் பகுதியில் அமைந்துள்ள காலணி சந்தையில் நள்ளிரவு நேரத்தில் திடீரென புகை வெளியேறியது. அதைத் தொடர்ந்து சிறிது நேரத்தில் தீ மளமளவென பரவி எரியத் தொடங்கியது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் நல்வாய்ப்பாக உயிரிழப்புகள் ஏற்படவில்லையெனத் தீயணைப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர்.