கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தில் அரசுப் பள்ளி குடிநீரில் விஷம் கலந்த விவகாரத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஹுலிகட்டி கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில், சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த சுலேமான் என்பவர் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார்.
இவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக, அப்பகுதியைச் சேர்ந்த 3 பேர், பள்ளி குடிநீரில் விஷம் கலந்துள்ளனர். இதையடுத்து தண்ணீரைப் பருகிய சில மாணவர்களுக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார், சம்மந்தப்பட்ட மூன்று பேரையும் கைது செய்தனர்.