உள்நாட்டுப் போரால் நீண்ட காலமாக பாதிக்கப்பட்ட சிரியாவின் இரண்டு முக்கிய மாகாணங்களில் மீண்டும் மோதல் வெடித்துள்ளது.
கடந்த டிசம்பரில் முன்னாள் அதிபர் பஷார் அல் அசாத்தை ஆட்சியில் இருந்து அகற்றி இடைக்கால அதிபராக அகமது அல் அஷாரா பதவியேற்றார்.
இந்நிலையில் ஸ்வீடான மாகாணத்தில் ட்ரூஸ் மதச் சிறுபான்மையினரை சேர்ந்த ஆயுதக் குழுக்களுக்கும், அரசுப் படைகளுக்கும் இடையே நேற்று மோதல் ஏற்பட்டது.
இதேபோல் வடக்கு அலெப்போ மாகாணத்திலும் அரசு ஆதரவு படைகளுக்கும் அமெரிக்காவின் ஆதரவுடை சிரிய ஜனநாயக படைகளுக்கும் இடையே ஏவுகணை தாக்குதல் நிகழ்ந்துள்ளது.