எம்பி சு.வெங்கடேசனுக்கு எதிராகப் பேச வேண்டாம் என திமுக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கு மாவட்டச் செயலாளர் கோ.தளபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக மாவட்டச் செயலாளர் எழுதியுள்ள கடிதத்தில், தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மதுரை எம்பி சு.வெங்கடேசன் தொடர்பாக ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் எதிர்மறையாகப் பேச வேண்டாம் என்றும், இது தொடர்பான புகார்கள் மாநிலத் தலைமைக்குச் சென்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதுபோன்ற நடவடிக்கைகள் மீண்டும் நடைபெற்றால் கட்சிக் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டுத் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.