கனடாவில் நடைபெற்ற ராமர் சிலை திறப்பு விழாவில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
கனடாவின் டொராண்டோ அருகே உள்ள மிசிசாகா பகுதியில் 51 அடி உயரத்தில் பிரம்மாண்டமான முறையில் ராமர் சிலை நிறுவப்பட்டுள்ளது.
கண்ணாடியிழை மற்றும் எஃகு கட்டமைப்பைப் பயன்படுத்தி வடிவமைக்கப்பட்டுள்ள ராமர் சிலை, மணிக்கு 200 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் காற்றைத் தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பாரம்பரிய கைவினைத்திறன் மற்றும் நவீன பொறியியலின் கலவையைப் பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள ராமர் சிலை திறப்பு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
மிசிசாகா பகுதியில் நடந்த ராமர் சிலை திறப்பு விழாவில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஜெய் ஸ்ரீராம் எனப் பக்தி கோஷம் எழுப்பினர்.