ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் உடல்நலக்குறைவால் டெல்லியில் காலமானார்.
ஜம்மு-காஷ்மீர் ஆளுநராக சத்யபால் மாலிக் இருந்த போதுதான் சிறப்புச் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டது.
79 வயதான சத்யபால் மாலிக் உத்தரப்பிரதேசத்திலிருந்து 2 முறை மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஜம்மு-காஷ்மீர் மட்டுமின்றி மேகாலயா, பீகார், ஒடிசா, கோவா உள்ளிட்ட மாநிலங்களிலும் ஆளுநராக பணியாற்றி உள்ளார்.
உடல் நலக்குறைவால் டெல்லி ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சத்யபால் மாலிக் நண்பகல் 1 மணியளவில் காலமானார்.