மதுரையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வெளுத்து வாங்கிய கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.
மதுரை, நெல்லை, தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டங்களில் கனமழை பெய்யுமென வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி மதுரை மாநகர் பகுதிகளான மாட்டுத்தாவணி, அண்ணாநகர், தெப்பக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக கனமழை வெளுத்து வாங்கியது.
இதனால் வெப்பம் தணிந்து இதமான காலநிலை நிலவியது. இருப்பினும் முக்கிய சாலைகளில் வெள்ளநீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்.