மதுரை ஒத்தக்கடையில் சாலையில் தேங்கிய கழிவுநீரை, பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி தூய்மை பணியாளர்கள் சுத்தம் செய்த காட்சி வெளியாகியுள்ளது.
கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு, பள்ளி முன்பு தண்ணீர் தேங்கிய நிலையில், ஒத்தக்கடை ஊராட்சி மன்ற செயலாளர் சாதிக் பாட்ஷா , தூய்மை பணியாளர்களுடன் அங்குச் சென்றார்.
அவரது மேற்பார்வையில் , தூய்மை பணியாளர்கள் எவ்வித பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி வெறும் கைகளால் கழிவுநீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர்.
இந்தக் காட்சி சமூகவலைத்தளங்களில் வெளியான நிலையில், சம்பந்தப்பட்ட ஊராட்சி செயலாளர் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வலுத்துள்ளது.