ஒருநாள் போட்டிக்கும் சுப்மன் கில்லை கேப்டனாக தேர்வு செய்யலாம் என முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் யோசனை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பேசிய அவர், ரோகித் சர்மா, விராட் கோலி ஒரு நாள் போட்டியில் விளையாடத் தயாராக உள்ளனர் என்றும், அவர்கள் இன்னும் தேர்வு செய்யப்படவில்லை எனவும் கூறியுள்ளார்.
ஆஸ்திரேலியா அல்லது மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் தேர்வுக்குழு விரும்பினால் சுப்மன்கில்லை கேப்டனாக தேர்வு செய்யலாம் என்றும், இதுவே சரியான நேரமாகும் எனவும் கவாஸ்கர் குறிப்பிட்டுள்ளார்.