காவல்துறையினர் உயிரிழக்கும் சம்பவங்களைக் கட்டுப்படுத்தாமல், அதற்கு இழப்பீடு கொடுப்பதில் மட்டுமே முதலமைச்சர் ஸ்டாலின் கவனம் செலுத்தி வருவதாக, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் செய்தியாளர்களிடம் பேசியவர்,
போலீசார் உயிரிழக்கும் சம்பவங்கள் கட்டுப்படுத்தப்படவில்லை என்றும் நிவாரணம் கொடுப்பதில்தான் முதலமைச்சர் கவனம் செலுத்துகிறார் என்று நயினார் நாகேந்திரன் கூறினார்.
ஆணவ படுகொலைக்கு எதிராகத் தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என்றும் திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு படு பாதாளத்திற்குச் செல்கிறது என்று நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டினார்
தமிழகத்தில் பாலியல் வன்கொடுமைகள் தொடர்ந்து நடைபெறுகின்றன என்றும் அரசு மருத்துவமனைகளில் போதிய மருத்துவர்கள் இல்லை என்று குற்றம் சாட்டியவர், போதுமான மருத்துவர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் கூறினார்.