குழந்தை பெற்றுக்கொண்டால் ரூ.44,000 மானியம் - கைகொடுக்குமா சீனாவின் புதிய திட்டம்?
Sep 12, 2026, 01:54 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

குழந்தை பெற்றுக்கொண்டால் ரூ.44,000 மானியம் – கைகொடுக்குமா சீனாவின் புதிய திட்டம்?

Murugesan M by Murugesan M
Aug 6, 2025, 07:48 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சீனாவில் சரிந்து வரும் பிறப்பு விகிதத்தை உயர்த்த அந்நாடு படாதபாடு பட்டு வருகிறது. மேலும், குழந்தைகள் பெற்றுக்கொள்ளக் கோடிகளைக் கொட்டி பெற்றோர்களை ஊக்குவித்து வருகிறது. இது குறித்த செய்தி தொகுப்பைப் பார்க்கலாம்.

உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளின் பட்டியில் சீனா 2வது இடத்தில் உள்ளது. இன்றைய தேதிக்கு அந்நாட்டில் சுமார் 141 கோடி மக்கள் உள்ளன. மக்கள் தொகையில் சீனா முதலிடத்தில் இருந்தபோது, பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டது. மக்கள் தொகை அதிகரிப்பதைக் கட்டுப்படுத்தியே ஆக வேண்டும் என்ற நிலைமைக்கும் தள்ளப்பட்டது.

எனவே, ஒரு குழந்தை கொள்கையை அந்நாடு அறிவித்தது. அதன்படி, ஒரு தம்பதி ஒரு குழந்தைதான் பெற்றுக்கொள்ள வேண்டும். மீறி 2வது முறை கருத்தரித்தால், கடுமையான அபராதம் விதிக்கப்படும். கட்டாய கருக்கலைப்பு, கருத்தடை உள்ளிட்டவையும் செய்யப்படும். ஆனால், இதெல்லாம் 10 ஆண்டுகளுக்கு முன்பு வரைதான்.

தற்போது நிலைமையே வேறு. சீன அரசு, தனது குடிமக்களிடம், “எத்தனை குழந்தைகளை வேண்டுமானாலும் பெற்றுக்கொள்ளுங்கள். குறைந்தது ஒரு குழந்தையையாவது பெற்றுக்கொள்ளுங்கள். ப்ளீ்ஸ்” எனக் கெஞ்சி வருகிறது. ஆனால், சீன மக்கள் அதற்கெல்லாம் செவி சாய்ப்பதாகத் தெரியவில்லை.

விளைவு, சீனாவில் குழந்தைகள் பிறப்பு விகிதம் அதிர்ச்சியூட்டும் வகையில் குறைந்து வருகிறது. இப்படியே சென்றால் எதிர்காலத்தில் இளைஞர்களின் எண்ணிக்கை ஒட்டுமொத்தமாகச் சரிந்துவிடும். முதியவர்கள் மட்டுமே அங்கு அதிக எண்ணிக்கையில் இருக்கும் நிலைமை ஏற்படும். இதற்கான அறிகுறிகள் தற்போதே தென்படத் தொடங்கிவிட்டன. தொடர்ந்து மூன்றாவது ஆண்டாகச் சீனாவில் மக்கள் தொகை குறைந்துள்ளது.

எனவே, நாட்டு மக்களைக் குழந்தைகள் பெற்றுக்கொள்ளச் செய்யும் வகையில் சீன அரசு, பல்வேறு திட்டங்களைக் கொண்டு வந்தது. பல்வேறு சலுகைகளையும் அறிவித்தது. ம்ஹூம்.. சீன மக்கள் அப்போதும் அசைந்து கொடுக்கவில்லை.

எனவே, குழந்தை பெற்றுக்கொண்டால் மானியம் வழங்கப்படும் என்ற அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, மூன்று வயதுக்குட்பட்ட ஒவ்வொரு குழந்தைக்கும் ஆண்டுதோறும் தலா 44 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2 கோடி தம்பதிகளுக்கு இந்த மானிய தொகையை வழங்க சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாயைச் சீன அரசு செலவிட உள்ளது. இதன் மூலம் குழந்தை வளர்ப்புக்கு அதிக தொகை செலவிடும் நாடுகளில் ஒன்றாகச் சீனா உருவெடுத்துள்ளது. இந்த இடத்தில் ஒரு கேள்வி எழலாம். சீன மக்கள் ஏன் குழந்தை பெற்றுக்கொள்ள ஆர்வம் காட்ட மறுக்கிறார்கள் என்று?.

வேலைப்பளு, வேலையின்மை, அதிக வீட்டு வாடகை, அதிகரிக்கும் கல்வி செலவு, தனிப்பட்ட சுதந்திரம்  என பல்வேறு காரணங்களை அவர்கள் பட்டியலிடுகின்றனர். ஒரு குழந்தையை வளர்த்து ஆளாக்க லட்சக்கணக்கில் செலவாகும் எனவும், அரசு வழங்கும் 44 ஆயிரம் ரூபாய்க்காக எல்லாம் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது எனவும் சீன இளைஞர்கள் சிலர் கருத்து தெரிவிக்கின்றனர்.

இருந்தாலும், தனது முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் போல, சீனா அரசு தன்னால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது.

Tags: china news todayRs. 44 thousands subsidy for having a child - will China's new scheme help?
Share
Tweet
SendShare
Previous Post

புகாரளிக்க வந்தவர் தூக்குக்கயிறுடன் காவல்நிலையம் வந்தாரா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

Next Post

திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு படு பாதாளத்திற்கு செல்கிறது : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

5 ஈரான் எண்ணெய் கப்பல்களை தாக்கி அழித்த அமெரிக்கா – மீண்டும் உக்கிரமடையும் தாக்குதல் – சிறப்பு தொகுப்பு!

பிரிக்ஸ் உச்சி மாநாடு : சீனாவுடன் வர்த்தக உறவை மேம்படுத்தும் முயற்சியில் இந்தியா தீவிரம் – சிறப்பு தொகுப்பு!

குடியரசு கட்சி வெற்றி பெற்றால் 5000 டாலர் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உறுதி!

நேபாள பெருவெள்ளத்தால் சிதைந்த சீனாவின் BRI ரயில் திட்டம் : பேராசைக்கு முற்றுப்புள்ளி – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies