டெல்லியில் நடைப்பயிற்சி மேற்கொண்ட தமிழக காங்கிரஸ் எம்.பி.சுதாவிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடந்து வருவதால், மயிலாடுதுறை மக்களவை தொகுதியின் காங்கிரஸ் எம்.பி சுதா ராமகிருஷ்ணன், டெல்லி சாணக்யபுரியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் தங்கியிருந்தார்.
அவர் சாணக்யபுரியின் சாந்திபாத் பகுதியில் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் ஒருவர் சுதாவின் கழுத்திலிருந்த தங்க நகையைப் பறித்துக்கொண்டு தப்பினார்.
இதுகுறித்து கழுத்தில் காயத்துடன் காங்கிரஸ் எம்.பி சுதா போலீசுக்கு சென்று புகாரளித்தார். இந்நிலையில் எம்.பி.சுதாவிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட நபரைக் கைது செய்த போலீசார், அவரிடமிருந்து நகையை மீட்டனர்.